புர்கினோ பசோவில் போராளிகளால் கடத்தப்பட் குழந்தைகள் உள்ளிட்ட பெண்கள் மீட்பு!

Jan 21, 2023 10:08 am

புர்கினோ பசோவில் ஆயுதம் ஏந்திய போராளிகளால் கடத்தப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர். 

ஆயும் ஏந்திய குழுவினர் சஹேல் பிராந்தியத்தின் சௌம் மாகாணத்தில் உள்ள அர்பிந்தா மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளை துப்பாக்கி முனையில் கடத்தினர். 

பாதுகாப்பு படையினர் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட நிலையில், சென்டர்-நோர்ட் பகுதியில், 27 பெண்கள் மற்றும் 39 குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் நாட்டின் வறண்ட மற்றும் முக்கிய கிராமப்புற பிரதேசங்களை ஆக்கிரமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


Read next: நிலத்தகராறில் முதியவர் மரணம்