குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் உடல் நிலை சீராக உள்ளது- டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலை நிர்வாகம்!

1 week

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, அண்மையில் இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.கடந்த 30 ஆம் திகதி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, ஐ.சி.யூ.வில் வைத்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை சீராக காணப்படுகின்றமையினால், சிறப்பு அறையொன்றுக்கு இன்று மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் ராம்நாத் கோவிந்தின் உடல்நிலையை வைத்தியர்கள் தொடர்ந்து அவதானித்து வருகின்றனர்.


Read next: ரஷ்ய இராணுவத்திற்கு சொந்தமான உளவு செயற்கைக்கோள் நடுவானில் உடைந்ததாக தகவல்