குடியரசு தின விழா,மத்திய பிரதேசத்தில் 215 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை!

Jan 25, 2022 12:18 pm

மத்திய பிரதேச அரசு ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறைக் கைதிகளை அவர்களின் நன்னடத்தை மற்றும் பிற அளவுகோல்களின் அடிப்படையில் விடுதலை செய்கிறது.

அதன் படி இந்த குடியரசு தினத்தன்று மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 215 கைதிகளை மத்தியப் பிரதேச அரசு விடுவிக்கும் என்று உள்துறை மற்றும் சிறைத்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இன்று தெரிவித்தார்.

இருப்பினும் கற்பழிப்பு மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை அனுபவித்து வருபவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள் என்றும் குடியரசு தினத்தன்று விடுவிக்கப்பட வேண்டிய ஐந்து பெண்கள் உட்பட இந்த 217 கைதிகளின் மீதமுள்ள தண்டனை அவர்களின் நல்ல நடத்தை காரணமாக மன்னிக்கப்படுகிறது என்று திரு. மிஸ்ரா செய்தியாளர்களிடம் கூறினார்.

மேலும் அவர் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் அவர்கள் (கைதிகள்) குற்றங்களைத் தவிர்த்து, தேசத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிப்பதின் மூலம் சமூகத்தில் தங்களை மறுவாழ்வு பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.

Read next: காலணியில் தேசியக்கொடி,அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு!