எதியோப்பியாவில் முகக்கவசம் அணியாவிட்டால் இரண்டு வருட சிறைதண்டனை

1 month

கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்தும் சுகாதார நடைமுறைகளை மீறும் நபர்களுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என எதியோப்பிய சட்டமா அதிபர திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டில் அவசரகால நிலை தளர்த்தப்பட்ட நிலையில் மக்கள் மத்தியில் வைரஸ் பரவல் தொடர்பிலான அச்சம் குறைவடைந்து வருகின்றது.

இந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கைக்குலுக்குதல் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதிருத்தல் ஒரு மேசையில் மூன்றுக்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருத்தல் அல்லது ஆறு அடி இடைவெளியின்மை போன்ற விடயங்கள் மீறப்படுமாயின் கடும் தண்டனைக்குள்ளாக நேரிடும் என எச்சரிக்கப்பட்டுளளது.

ஆபிரிக்காவில் அதிக சனத்தொகை கொண்ட இரண்டாவது நாடு எதியோப்பியா ஆகும்.இங்கு கொவிட் 19 னை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் மாதம்அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து செப்டெம்பர் மாதம் இது நீக்கப்பட்டது.

நாட்டில் இதுவரை 91118 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 1384 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் 44506 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் மாத இறுதியில் இங்கு மீண்டும் நோய் தொற்று அதிகரித்தது.இங்கு மருத்துவ பரிசோதனைக்கான வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்றமையினால் உண்மையான நிலவரத்தை அறிந்துக்கொள்வதில் சிரமம் உள்ளது.

கடந்த சில வாரங்களில் மாத்திரம் 79 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிராந்திய மற்றும் பாராளுமன்ற தேர்தல்கள் கொவிட் 19 தொற்று காரணமாக பிற்போடப்பட்டுள்ளது.

பெரும்பாலும் அடுத்த வருடம் நடத்த வாய்ப்புள்ளதாக நம்பப்படுகின்றது.

இதேவேளை அமெரிக்கா மற்றும் ஐரோப்பா எதிர்கொண்டுள்ள பாரதூரமான நிலையை இதுவரை ஆபிரிக்கா காணவில்லை.

இளம் வயதினரும் பின்தங்கிய கிராமங்களில் உள்ளவர்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒத்துழைத்துள்ளதாக எதியோப்பிய சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுசுகாதார கட்டமைப்பை சீர்குலைக்க வாய்ப்பு உள்ளதால் மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என ஆபிரிக்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Read next: டிரம்ப்-பைடன் விவாதம்: குறைந்தளவான இடையூறுகள் பரந்தளவான குற்றச்சாட்டுகள்