ராசி-அதிர்ஷ்ட பலன்கள்

Jan 20, 2023 04:32 am

மேஷம் -ராசி: 

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை  அறிந்து நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும். செலவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

அஸ்வினி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

பரணி : அலைச்சல்கள் உண்டாகும். 

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.

ரிஷபம் -ராசி:  

பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம்  குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம்.  உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படவும். தடைகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

கிருத்திகை : குழப்பம் உண்டாகும். 

ரோகிணி : விவேகம் வேண்டும்.

மிருகசீரிஷம் : நிதானத்துடன் செயல்படவும். 

மிதுனம் -ராசி: 

குடும்ப உறுப்பினர்களின் மூலம்  மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். அறிமுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

திருவாதிரை : முன்னேற்றம் உண்டாகும்.

புனர்பூசம் : முதலீடுகள் அதிகரிக்கும். 

கடகம் -ராசி: 

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம்  சேமிப்பு குறையும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பான சூழ்நிலைகள் உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.

பூசம் : சேமிப்பு குறையும். 

ஆயில்யம் : ஒத்துழைப்பான நாள்.

 சிம்மம் -ராசி:  

இனம்புரியாத சிந்தனைகளின் மூலம்  செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நுட்பமான சில விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் வழியில் அலைச்சலும், அனுகூலமும் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

மகம் : சோர்வு உண்டாகும்.

பூரம் : அனுசரித்து செல்லவும். 

உத்திரம் : அனுகூலமான நாள்.

கன்னி -ராசி: 

உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். தனம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

உத்திரம் : ஏற்ற, இறக்கமான நாள்.

அஸ்தம் : மாற்றம் ஏற்படும். 

சித்திரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

துலாம் -ராசி: 

மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் திருப்தி உண்டாகும். புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். மனதை குழப்பிய சில விஷயங்களுக்கு தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

சித்திரை : ஆதரவு கிடைக்கும். 

சுவாதி : ஒத்துழைப்பு மேம்படும். 

விசாகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.

விருச்சிகம் -ராசி: 

எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறுவதில் காலதாமதம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல் மேம்படும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் வழியில் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

விசாகம் : காலதாமதம் உண்டாகும். 

அனுஷம் : நெருக்கடிகள் குறையும். 

கேட்டை : வாதங்களை தவிர்க்கவும்.

தனுசு -ராசி: 

பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். போட்டிகள் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

மூலம் : சிந்தனைகள் மேம்படும். 

பூராடம் : பிரச்சனைகள் குறையும். 

உத்திராடம் : பதற்றமின்றி செயல்படவும்.

மகரம் -ராசி: 

உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத சில திருப்பங்கள் உண்டாகும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். தொழில் நிமிர்த்தமான நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உலக நிகழ்வுகளின் மூலம்  மனதில் மாற்றம் ஏற்படும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

உத்திராடம் : திருப்பங்கள் உண்டாகும். 

திருவோணம் : புரிதல் மேம்படும்.

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும். 

கும்பம் -ராசி. 

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விவசாயப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் ரீதியான வெளியூர் பயணங்களுக்கான வாய்ப்புகள் அமையும். கவனம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.

அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

சதயம் : சிந்தித்து செயல்படவும்.

பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் -ராசி: 

குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.

உத்திரட்டாதி : மேன்மை உண்டாகும். 

ரேவதி : வரவுகள் கிடைக்கும்.

Read next: யாழில் குடும்பத் தலைவரின் உயிரை பறித்த போதை பொருள்!