ஆப்கானிஸ்தானில் உள்ள தனது குடும்பத்தை நினைத்து பிரித்தானியாவில் கவலையில் மூழ்கிய வீரர்!

Aug 18, 2021 08:46 am

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷித் கான் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் டிரண்ட் ரொக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையால்,

அங்கிருந்து தனது குடும்பம் உடனடியாக வெளியேற முடியாத நிலையில் உள்ளதால் அவர் கவலையில் உள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சனிடம் ரஷித் கான் இதை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், 

ஆப்கானிஸ்தான்  நாட்டின் தற்போதைய நிலை குறித்து நானும், ரஷிதும் நீண்ட நேரம் உரையாடினோம்.  

தனது நாட்டின் நிலையை குறித்து வருத்தப்படும் அவர், தனது குடும்பத்தை அங்கிருந்து வெளிக்கொண்டு வர முடியாத கவலையில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Read next: தமிழகத்தில் இன்று நிழலைக் காணமுடியாது!