ஒரே நாளில் இரண்டு உலக சாதனை படைத்த ரணில்!

May 12, 2022 02:41 pm

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று இலங்கை பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.

6வது முறையாக பிரதமராக பதவி பிரமாணம் செய்து அவர் உலக சாதனை படைத்துள்ளார். 

கடந்த பொது தேர்தலில் ரணில் விக்ரமிங்க வெறும் 20000 என்ற சிறிய வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தார். 

எனினும் தேசிய பட்டியலில் உறுப்பினர் பதவி பெற்று நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளார்.

அவ்வாறு தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்து பிரதமராகி வரலாற்றில் இடம்பிடித்தவராக ரணில் சாதனை படைத்துள்ளார்.

அவ்வாறான முறையில் பதவிக்கு வந்த ஒருவர் இலங்கையில் மாத்திரமின்றி உலகத்திலேயே வேறு யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.

அத்துடன் அவர் ஆறாவது தடவையாகவும் பிரதமராக பதிவி பிரமாணம் செய்துள்ளார். இதுவும் ஒரு உலக சாதனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read next: பெண்களுக்காக ஸ்பெயின் அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு