ரங்கன ஹேரத் பங்களாதேஷ் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியமனம்

Jun 26, 2021 02:21 pm

பங்களாதேஷ் கிரிக்கெட் சபையினால் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத் பங்களாதேஷ் அணியின் சுழல் பந்து வீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்த நியமனமானது ஐசிசி டி20 உலக கிண்ணத்தொடர் நிறைவடையும் வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, பங்களாதேஷ் அணியின் எதிர்வரும் சிம்பாப்வே சுற்றுத் தொடரில் சுழற்பந்து ஆலோசகராக ரங்கன ஹேரத் அணியுடன் இணைந்துக் கொள்ளவுள்ளார். 

43 வயதுடைய ரங்கன ஹேரத் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 433 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: V21e ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தும் VIVO