ரஜினிக்கு வில்லனாகும் அரவிந்த்சாமி, இயக்குனர் யார் தெரியுமா..?

Sep 06, 2022 09:58 am

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டார் திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கிக் கொண்டிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Rajinikanth

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் இணைந்துள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி வைரலானதை தொடர்ந்து அவ்வப்போது படம் குறித்த தகவல்களும் இணையத்தில் வெளியாகி கொண்டிருக்கிறது.

Don

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது 170 ஆவது திரைப்படத்திற்கு ‘டான் திரைப்பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தியுடன் இணையுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் ரஜினிக்கு வில்லனாக பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.

Arvind

இது குறித்த அதிகாரிவபூர்வமான அறிவிப்பு இன்று பிரம்மாண்டமாக நடைபெற இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தளபதி படத்திற்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதால் ரசிகர்களின் மத்தியில் இப்படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

Read next: கோவை மாவட்ட அதிமுக ஒன்பது சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.