“நான் கட்சி தொடங்கவில்லை” நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு
Dec 29, 2020 07:04 am

நடிகர் ரஜினிகாந்த் தான் கட்சி தொடங்கவில்லை என இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஜினிகாந்த் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவறமாட்டேன். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்போது அரசியலுக்கு வரவில்லை என்று சென்னால் நாலு பேர் நாலுவிதமாக என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.
ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும்” என பதிவிட்டுள்ளார்.
Read next: இங்கிலாந்தில் ஜனவரி முதல் இரண்டு வாரங்களாவது பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட வேண்டும் என கோரிக்கை