ராஜஸ்தான் ராயல்ஸ் முக்கியமான வீரர் தாயகம் திரும்பியுள்ளார்..! அப்போ ப்ளே ஆப்?

May 09, 2022 12:56 pm

வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த இடது கை அதிரடி பேட்டர் ஷிம்ரன் ஹெட்மையர் ராஜஸ்தான் அணியிடமிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு தாயகம் திரும்பியுள்ளார். இதனால் அந்த அணிக்கு பிளே ஆப் நேரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மனைவி நிவானிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஹெட்மயர் நேற்று காலை தாயகம் புறப்பட்டு சென்றார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 11 ஆட்டங்களில் 291 ரன்கள் (சராசரி 72.75) சேர்த்துள்ள அவர் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார்.

இதில் 7 ஆட்டங்களில் நாட்-அவுட்டாக இருந்துள்ளார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக உள்ள அவரது மனைவி நிவானிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஹெட்மயர் நேற்று காலை தாயகம் புறப்பட்டு சென்றார். இது அவருக்கு முதல் குழந்தையாகும்.

கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியுள்ள அவர் விரைவில் அணியுடன் இணைவதை எதிர்நோக்கி உள்ளதாக ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது. என்றாலும் சில ஆட்டங்களை அவர் தவற விடுவது அந்த அணிக்கு பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகமில்லை.

இது தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தியில், “நாங்கள் ஹெட்மையருக்கு எல்லா வழிகளிலும் உதவுகிறோம், அவருக்கும் அவரது மனைவிக்கும் எங்கள் வாழ்த்துக்கள். ஷிம்ரன் ஹெட்மையர் விரைவில் அணிக்குத் திரும்பி மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்பதை எதிர்நோக்குகிறோம்.” என்று பதிவிட்டுள்ளது.

கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை வென்றது, அடுத்த போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.

Read next: தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம்..! காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பு