ராஜபக்சக்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என அழுத்தம்

Sep 18, 2022 12:08 pm

ராஜபக்சக்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று 43 ஆம் படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.  

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியானது தவறுகளை திருத்திற்கொண்டு, ஜனநாயக வழியில் பயணிக்க தயாரில்லையெனில் அக்கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை எனவும் சுட்டிக்காட்டினார்.  

அத்துடன், எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்திருந்தால், போராட்டக்காரர்கள் இன்று வீரர்கள் ஆகியிருப்பார்கள்.

ஆனால் ஆட்சி கட்டமைப்பில் ராஜபக்சக்களின் ஆதிக்கம் இன்னும் இருப்பதால்தான் போராட்டக்காரர்கள் தண்டிக்கப்படுகின்றனர் எனவும் சம்பிக்க குறிப்பிட்டார்.


Read next: பாரிஸ் பிராந்திய மக்களுக்கு எச்சரிக்கை - 4000 யூரோவை இழந்த பெண்