கனடாவில் பிறந்த இருவர்-ஒருவர் கனடியர் மற்றவர் பிரித்தானியர்-வெல்லப்போவது யார்?

Sep 10, 2021 10:59 pm

யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முதலில் அரை இறுதியில் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் விளையாட தகுதி பெற்றவர் பிரித்தானியாவின் எம்மா ராடுகாணு. இவர் இறுதி போட்டியில் கனடாவின் லேய்லா பெர்னாண்டஸ் என்ற இந்த வாரம் 19 வயதை எட்டிய கனடியருடன் வெற்றிக்கிண்ணத்துக்காக விளையாடுவார்.

எம்மா ராடுகாணுவின் தந்தை ருமேனியா நாட்டவர் தயார் சீனாவை அடியாக கொண்டவர்.

ராடுகாணு ரொறொண்டோவில் பிறந்து ராடுகாணு அவர்களின் பெற்றோர் அவர் இரண்டு வயதாக இருக்கும் பொழுது பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தனர். பெர்னாண்டஸ் கனடாவில் பிறந்தவர்.

இந்த இரண்டு விளையாட்டு வீராங்கனையும் தரவரிசையில் இடம்பெறத்தவர்கள் என்பதுடன்  

இருவரும் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட வீரர்கள். இவ்வாறு 1999 பின்னர் இருவர் பங்குபெறும் முதலாவது யு எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியாகும். இதற்கு முன்னர் செரீனா வில்லியம் மற்றும் மார்டினா ஹிங்கிஸ் விளையாடி இருந்தார்கள். அந்த நேரத்தில் 18 வயதான ராடுகாணு மற்றும் பெர்னாடெஸ் பிறந்து இருக்கவில்லை.

இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ராடுகாணு தனது 150 இடத்தில இருந்து 24 இடத்துக்கு முன்னேறுவார். அதேவேளை 73 இடத்தில் உள்ள பெர்னாண்டஸ் 20 வது இடத்துக்கு முன்னேறுவார்.

இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை தரவரிசையில் உள்ள வீரர்களை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியதே ஒரு சான்றாகும். இதனால் நாளை நடைபெறப்போகும் இறுதி போட்டி மிகவும் பரபரப்பாகவும் பலராலும் பேசப்படும் போட்டியாகவும் இருக்கும். 

Read next: யாழ்ப்பாணத்தில் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த இளம் பெண்ணை பலியெடுத்த கொரோனா!