கேரளாவில் கொரோனா அச்சம் காரணமாக இறுதி பிரசாரத் தினத்தில் பொதுக்கூட்டங்களுக்கு தடை!

1 week

கேரளாவில், அரசியல் கட்சிகள் இன்று இடம்பெறவிருந்த பொதுக்கூட்டங்களுக்கு தடை விதித்து, தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.கேரளாவில், 140 தொகுதிகளை உள்ளடக்கிய சட்டசபைக்கு, நாளை மறுதினம் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ளது.இந்த நிலையில், இன்றுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடையவுள்ள நிலையில்,  இறுதிக்கட்ட பிரசாரங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இதேநேரம், மாநிலத்தில், கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பிரசாரத்தின் இறுதி நாளை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் பெரிய அளவிலான பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்த ஏற்பாடு செய்துள்ளன.பொதுக்கூட்டத்திற்காக மக்கள் ஒன்றுகூடினால், வைரஸ் பரவல் மேலும் அதிகரிக்கும் என்பதால், இதற்கு தடை விதிக்கக்கோரி, தேர்தல் ஆணையத்திற்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி, நேற்று கடிதம் அனுப்பினார்.அவரது கோரிக்கையை ஏற்ற ஆணையம், கேரளாவில் இன்று இடம்பெறவிருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்கு தடை விதித்து, உத்தரவிட்டது.

Read next: திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேசத்தில் நஞ்சருந்திய நிலையில் வீதியோரத்தில் கிடந்த 35 வயது தந்தை!