கால்பந்து விளையாட்டிற்கு அரசு முதன்மை இடத்தை தரவேண்டுமென தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் போராட்டம்

Nov 24, 2022 06:44 am

இந்தியாவில் கால்பந்து விளையாட்டிற்கு முதன்மை இடத்தை தர வலியுறுத்தி கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு

தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. கால் பந்து விளையாடும் சிறுவர்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்

கால்பந்து விளையாட்டிற்கு மத்திய மாநில அரசுகள் முதன்மை இடத்தை தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் கிரிக்கெட் விளையாட்டிற்கு கிடைக்கும் அங்கீகாரம் கால்பந்து விளையாட்டிற்கு கிடைப்பதில்லை என தெரிவித்த அவர்கள்

கிரிக்கெட் விளையாட்டு ஒரு சூதாட்டம் எனவும் முழக்கங்களை எழுப்பினர். தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் தலைமையில்

நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் உட்பட திராவிட கட்சிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதை செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிட கழகப் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் அரசு கால்பந்து விளையாட்டிற்கு

முதன்மை இடத்தை வழங்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் தற்போது உள்ள கால்பந்தாட்ட மைதானங்களை புரனமைக்க வழிவகை செய்வதில்லை என தெரிவித்தார்.

மேலும் அனைத்து மாவட்டங்களிலும் கால்பந்து விளையாட்டு மைதானங்களை அமைக்க வேண்டும் எனவும் கால் பந்து விளையாட்டு போட்டிகளை

நடத்தி இளைஞர்கள் மத்தியில் இப்போட்டிக்கான ஊக்கத்தை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதுமட்டுமின்றி கபடி, ஹாக்கி போட்டிகளையும் ஊக்கப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

Read next: கொள்கலனில் மறைத்து வைக்கப்பட்ட சிசுவின் உடல் - பெற்றோர் கைது