புதிய தொழில் தொடங்கிய பிரியா பவானி சங்கர்

Jan 23, 2023 06:25 am

அழகிய தமிழ் பேசும் செய்தி வாசிப்பாளராக மீடியாவிற்குள் நுழைந்து அதன்பின் நாயகியாக மக்களின் மனதை கொள்ளை கொண்டு வருபவர் நடிகை பிரியா பவானி ஷங்கர்.

கல்யாணம் முதல் காதல் வரை என்ற விஜய் டிவி சீரியலில் நடித்து மக்களின் பேராதரவை பெற்ற இவர் அப்படியே சினிமா பக்கமும் வந்தார்.

மேயாத மான் படத்தில் முதன்முறையாக நாயகியாக நடிக்க தொடங்கிய பிரியாவின் பயணம் இப்போது முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வரை வந்துள்ளது.

அடுத்தடுத்து அவரது கைவசம் ஏராளமான படங்கள் உள்ளன. கடந்த டிசம்பர் மாதம் கடற்கரை பக்கத்தில் புதிய வீடு வாங்கியதாக அறிவித்த நடிகை இப்போது புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளதாக வீடியோவுடன் பதிவு செய்துள்ளார்.

அதாவது அவர் சொந்தமாக புதிய ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியுள்ளாராம், விரைவில் திறக்க இருக்கிறாராம். தனது ரெஸ்டாரண்ட்டை வீடியோவாக எடுத்து வெளியிட அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Read next: பெட்ரோல் குண்டு வீச்சு