போரிஸ் ஜொன்சன் மற்றும் ரிஷி சுனக் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

Jul 18, 2021 02:53 pm

பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக சுய தனிமைப்படுத்தலை தவிர்க்கும் பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஆகியோரின் நகர்வுகளை பொதுமக்கள் விமர்சித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிரித்தானிய சுகாதார அமைச்சர் சாஜித் ஜாவிட்டுடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணியதன் அடிப்படையில் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவலை கண்டறிவதற்கான துரித திட்டமொன்றில் பங்கேற்கவுள்ளதாக தெரிவித்து சில மணித்தியாலங்களில் இந்த  அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பிரதமர் போரிஸ் ஜொன்சன், காணொளி காட்சி வழியாக சந்திப்புக்களை மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read next: லெபனானின் இரண்டு கரடிகள் அமெரிக்காவுக்கு செல்கின்றன.