தோட்ட தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஓரிரு நாளில் தீர்வு.

1 week

இராகலை, மாகுடுகலை தோட்டம் மற்றும் கிளன்டவன் ஆகிய தோட்டங்களில் கடந்த ஒரு மாதகாலமாக பணி நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கும் அத்தோட்ட தொழிலாளர்களை இரண்டாவது முறையாக இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம்  மாகுடுகலை தோட்டத்திற்கு நேரடி விஜயத்தை மேற்கொண்டு பார்வையிட்டதுடன் அவர்களின் பிரச்சினைகளுக்கு ஓரிரு நாட்களில் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இதன்போது மாகுடுகலை மற்றும் கிளன்டவன் ஆகிய தோட்டங்களில் தேயிலை நிலங்களில் காடாகியுள்ள புற்களை ஒழிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.மேலும் குறித்த இரண்டு தோட்டங்களையும் நிர்வாகம் செய்து வரும் செரண்டிப்பிட்டிய தனியார் கம்பணியிடம் இருந்து மீட்க்கப்பட்டு மத்துரட்ட பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இணைக்க வேண்டும் என தோட்ட தொழிலாளர்கள் முன்வைத்த நீண்டகால கோரிக்கையை ஆராய்ந்துள்ளதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் சிறந்த தீர்வை பெற்றுதருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.அதேநேரத்தில் கடந்த மாதம் ஆறாம் திகதியில் இருந்து தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டை கண்டித்து மேற்படி இரண்டு தோட்ட தொழிலாளர்கள் 187 பேர் சரியான நீதி கிடைக்கும் வரை பணிக்கு செல்வதில்லை என வரை ஒருமாதம் பணி பகிஷ்கரிப்பை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் கடந்த மாதம் (23) ஆம் திகதி இத்தோட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூடிய விரைவில் மாகுடுகலை தோட்ட மக்களின் பிரச்சினைக்கு சரியான தீர்வை பெற்று தருவேன் என வாக்குறுதி வழங்கியிருந்தார்.அதன் அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டு வந்த நிலையில் நேற்றைய தினம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு மக்களின் நிலைமையை பார்வையிட்டார்.

Read next: மீண்டும் முழுமையாக திறக்கப்படுகின்றது கலிபோர்னியா