ஆஸ்திரேலியாவில் TikTok செயலியை தடை செய்ய திட்டம்

Mar 18, 2023 02:35 am

மேற்கு ஆஸ்திரேலியாவின் மாநில அரசு பொது ஊழியர்களின் தொலைபேசிகளில் TikTok  செயலியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது.

ஆனால், அதற்கு முதலில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக மாநில அரசு அறிவித்தது.

கனடா - நியூசிலாந்து - பிரித்தானியா - அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே TikTok  தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலி மூலம் முக்கியமான தகவல்கள் சீன அதிகாரிகளின் கைகளுக்குச் செல்லும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இது அமைந்துள்ளது.

இதேபோன்ற தடையை ஆஸ்திரேலியாவும் அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், மத்திய அரசு இதுவரை அதுபோன்ற அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

மேற்கு ஆஸ்திரேலிய மாநில அரசின் கோரிக்கை எப்படியாவது அனுமதிக்கப்பட்டால், ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற தடையை அமல்படுத்திய முதல் மாநிலமாக அது மாறும் என குறிப்பிடப்படுகின்றது.

Read next: இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு முதலாம் தவணை அறிவிப்பு