கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டி மனு
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பத்தியால் பேட்டையை சார்ந்த மறைந்த ஏகாம்பரம் அவர்கள் கொரோனா பெரும் தொற்று காரணமாக 4/8/2020 அன்று திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார் .
அவருடைய மனைவி பவானி அவர்கள் இரண்டு வருடமாக இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு மிகவும் வருமையில் வாழ்ந்து வருகின்றேன் என்று தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நலச் சங்க திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் கூறியுள்ளார்.
நிர்வாகிகள் தலையிட்டு ஆலோசனைகளையும் ஆறுதலையும் கூறி, உதவி மேலாளர் அவர்களிடம் அவரின் வறுமை நிலையை எடுத்துக் கூறினர். அப்போது உதவி மேலாளர் அவர்கள் உங்களுக்கு கண்டிப்பாக உதவி செய்கின்றேன், மாவட்ட மேலாளரிடம் கடிதம் கொடுங்கள் என்று கூறினார்.
அதனடிப்படையில் இன்று 5/7/2022 மாவட்ட மேலாளர் அவர்களிடம், என்னுடைய குடும்ப சூழ்நிலை கருதி தற்போது தினக்கூலி அடிப்படையில் பணி கொடுத்தால் கூட என்னுடைய பிள்ளைகளை காப்பாற்ற எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கடிதம் கொடுத்தார்.
மாவட்ட மேலாளர் அவர்களும், உதவி மேலாளர் அவர்களும் ஆலோசனை செய்து, விரைவில் உங்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர்.
அந்த குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் அன்புள்ளம் கொண்டவர்கள் அவருக்கு விரைவில் மாவட்ட அலுவலகத்தில் தினக்கூலி அடிப்படையில் கூட ஏதாவது ஒரு வேலை கிடைக்க உதவினால் பெரும் உதவிகரமாக இருக்கும்.
Read next: நிலா யாருக்கு சொந்தம் மோதல் ஆரம்பம்