ஒரு வாரத்திற்குள் மூன்றாவது ஜனாதிபதி தெரிவு

1 week

பெரு நாட்டில் ஒரு வாரத்திற்குள் மூன்றாவது ஜனாதிபதி ஒருவரை அந்நாட்டு நாடாளுமன்றம் தேர்வு செய்துள்ளது.

இதன்படி 76 வயதான பொறியியலாளரும் கல்வியாளருமான பிரான்சிஸ்கோ சகஸ்டியை நாடாளுமன்றம் தேர்வு செய்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் வரை நாட்டில் ஆட்சியை கொண்டு செல்ல இவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக இருந்த மார்டின் விஸ்காரா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் கடந்த வாரம் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

இது நாட்டில் பெரும் ஆர்ப்பாட்டங்களை தூண்டியது. இதனால் குறைந்தது இருவர் கொல்லப்பட்டதோடு பாலரும் காயமடைந்தனர்.

இதனை அடுத்து இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட மனுவேல் மரினோ ஒரு வாரத்திற்கு தனது பதவியை இராஜினாமா செய்தார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தேவையான குறைந்தபட்ச 60 வாக்குகளை வென்றே சகஸ்டி புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Read next: மன்னார் மாவட்டத்தில் 30 குளங்கள் இது வரை புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது-மன்னார் நீர்ப்பாசன பணிப்பாளர்.