அமெரிக்காவில் பல்பொருள் அங்காடிக்குள் - பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

May 14, 2022 08:36 pm

அமெரிக்காவின் நியூயோர்க் மாநிலத்தின் பஃபலோ நகரில் உள்ள Tops பல்பொருள் அங்காடிக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

குறைந்தது ஒன்பது பேர் சுடப்பட்டுள்ளனர், இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

சந்தேக நபர் ஒருவர் பஃபலோ பொலிஸ் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார் .சந்தேக நபரின் நிலை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

முதற்கட்ட தகவல்களின்படி, தலையில் சுடப்பட்ட பலர் உட்பட குறைந்தது 9 பேர் சுடப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பல்பொருள் அங்காடிக்கு வெளியே தரையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாக அறிவிக்கப்பட்டுளு்ளது.

பாதிக்கப்பட்ட பலர் பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஃபலோவில் உள்ள ஜெபர்சன் வீதியில் உள்ள Tops பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிச் சூடு நடத்துவது குறித்து தனக்கு அறிவிக்கப்பட்டதாக எரி கவுண்டி நிர்வாகி மார்க் போலன்கார்ஸ் கூறினார்.

Read next: அழகுராணி போட்டி பாலியல் சர்ச்சை வழக்கு இரகசியமாக இடம்பெறுகிறது