ஆபத்து என்று தெரிந்தும் மகிழ்ச்சியுடன் திரும்பும் உக்ரைன் மக்கள்

May 14, 2022 09:54 am

உக்ரைனின் கிழக்கில் உள்ள கார்கிவ் பிராந்தியத்தில்  உக்ரைன் ஆயுதப் படைகள் ரஷ்யர்களை பின்னுக்குத் தள்ளுவதாகவும், இதனால் மக்கள் மகிழ்ச்சியுடன் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தொடங்குவதாகவும் அப்பகுதியின் ஆளுநர் கூறுகிறார்.

ஆனால் அங்குள்ள நிலைமை இன்னும் ஆபத்தானது என்றும், மக்கள் திரும்பி வருவதற்கு முன்பு தங்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் ஆளுநர் Oleh Synyehubov எச்சரித்தார்.

ரஷ்ய துருப்புக்கள் அப்பகுதியில் பெருமளவில் கண்ணிவெடிகளை புதைத்துள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

ரஷ்ய துருப்புக்கள் நகரத்தைத் தாக்கவில்லை, ஆனால் பிராந்தியத்தில் உள்ள மற்ற சமூகங்களை குறிவைத்து தாக்கியதாகவும் Synyehubov கூறினார்.

மேலும், ஒவ்வொருவரையும் அபாய சத்தங்களுக்கு போதுமான அளவில் பதிலளிக்குமாறும், தேவையில்லாமல் தெருக்களில் இருக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

Read next: “நேட்டோ” அணு ஆயுதங்களை நிலை நிறுத்தினால் போர் வெடிக்கும் - ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை