ஜெர்மனியில் விறகை பயன்படுத்த தயாராகும் மக்கள்!

Jul 02, 2022 12:41 pm

ரஷ்யா உக்ரேன் மீது படையெடுத்ததிலிருந்து எரிசக்தி விலை உலகெங்கிலும் மிக வேகமாக உயரத் தொடங்கிவிட்டது.

இந்த நிலையில் இந்த போரினால் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கே அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெர்மனி, போலந்த உள்ளிட்ட நாடுகளில் குளிர்காலம் தொடங்கும் போது மாற்று நடவடிக்கை மேற்கொள்ளவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அதைச் சமாளிக்க விறகை அதிகம் பயன்படுத்த மக்கள் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலக்கரியின் விலை சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது மும்மடங்காகியுள்ளது. ஒரு டன் நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் எரிபொருளுக்கு மக்கள்  விறகை நாடுகின்றனர், இதன் மூலம் பயனடையலாம் என மக்கள் எண்ணியுள்ளனர்.

ஏற்கனவே ரஷயாவிடம் இருந்து வரும் எரிவாயு குறைக்கப்பட்டுள்ளமையினால் மக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் போரை அடுத்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மூண்டிருக்கின்ற எரிசக்தி மோதல் ஜேர்மனியை உலுக்கத் தொடங்கியுள்ளது.

தொழிற்சாலைகளுக்கும் மற்றும் பாவனையாளர்களுக்கும் பங்கீட்டு அடிப்படையில் (gas rationing) எரிவாயுவை வழங்கவேண்டிய கட்டத்தை நோக்கி அது நகரத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read next: இலங்கையில் எரி பொருள் தட்டுப்பாட்டால் மூடப்படும் விமான நிலையங்கள்