உக்ரைனுக்காக புதியவகை ஆயுதங்களை தயாரிக்க நிறுவங்களை தேடும் அமெரிக்கா

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சின் பென்டகன் அமெரிக்காவில் உள்ள ஆயுத தயாரிப்பு நிறுவங்களை உக்ரைனுக்காக வேகமாகவும் திறன் வாய்ந்த ஆயுதங்களை தயாரிக்க ஆலோசனை செய்து வருகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் ஆயுதங்கள் மிகக்குறைந்த பயிற்சியின் மூலம் உக்ரைன் இராணுவத்தினர் பயன்படுத்த கூடியதாக இருக்கவேண்டும் என்று பென்டகன் எதிர்பார்க்கிறது.
இவ்வாறு தயாரிக்க அமெரிக்க நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிப்பதற்கு வரும் மே 6 ஆம் திகதி கடைசி நாள். இவ்வாறு கொடுக்கப்படும் தகவலில் வான் பாதுகாப்பு, ஆன்டி ஆர்மர், ஆன்டி பெர்சனல், கடல்கரை பாதுகாப்பு, கவுண்டர் பாட்டரி, ஆளில்லா விமான சிஸ்டம் மற்றும் தகவல் தொடர்பு, அதாவது செயற்கை கோல் மற்றும் இணைய தகவல் பரிமாறல் போன்றவை உள்ளடங்கும்.
Read next: வட மாநில தொழிலாளர்களை அழைத்து வரும் நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்