பிரித்தானியாவில் நள்ளிரவில் லண்டனுக்குச் சென்ற 11 வயதுச் சிறுமி தொடர்பில் வெளியான அதிர்ச்சி செய்தி!

Jul 24, 2021 12:08 pm

பிரித்தானியாவில்  Bolton-ல் வசிக்கும் அஷீமா மற்றும் மிஸ்ரா ஆகியோரின் மகளான ஃபாத்துமா காதிர் (Fatuma Kadir) எனும் 11 வயது பள்ளி மாணவி காணாமல் போயு்ளளார்.

இவர் நேற்று நள்ளிரவில் கிரேட்டர் மான்செஸ்டர் நகரத்திலிருந்து லண்டன் சென்ற போது காணாமல் போயுள்ளார்.

ஃபாத்துமாவின் பெற்றோர் ஃபாத்துமா வியாழக்கிழமை இரவு 10.45 முதல் காணவில்லை என பொலிஸில் தகவல் கொடுத்துள்ளனர்.

 அதைத் தொடர்ந்து மான்செஸ்டர் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.

அதில் ஃபாத்துமா முதலில் பால்டனிலிருந்து கிரேட்டர் மான்சேஸ்டருக்கு ரயிலில் சென்றுள்ளார். 

பிறகு அங்கிருந்து மற்றோரு ரயில் மாறி வெள்ளிக்கிழமை அதிகாலை 1.13 மணியளவில் London Euston ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.

அவர் அங்கு வந்ததற்கான ஆதாரமாக சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளன. 

ஃபாத்துமா வெள்ளிக்கிழமை காலை 11.15 மணியளவில் லண்டன் சுரங்கவழி குழாய் ரயில் நிலையத்தில் காணப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது டவர் பிரிட்ஜ் பகுதியைச் சுற்றியுள்ள இடங்களில் தான் இருக்கக்கூடும் என்று பொலிஸார் நம்புகின்றனர்.

இந்நிலையில் சிறுமியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டு பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

Anyone with information is asked to call 0161 856 5757 quoting log number 3275 of 22/07/2021, or report it online at www.gmp.police.uk. Alternatively, you can contact Crimestoppers anonymously on 0800 555111.


Read next: ஆப்கான் அகதிகளுக்கு 100 மில்லியன் டொலர்கள் நிதியுதவி