பிரித்தானிய திரிபடைந்த வைரஸ் குறித்த தரவுகளை ஒக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் அடுத்த வாரமளவில் எதிர்பாப்பு

3 months

உருமாறியுள்ளவைரஸுக்கு எதிரான கொவிட் 19 தடுப்பு மருந்தின் ஆய்வு குறித்த தரவுகளை அடுத்த வாரமளவில் பெற்றுக்கொள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் எதிர்பார்க்கின்றது.

அமெரிக்க நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்தின ஆலோசனைக் குழுவின் நிகழ்நிலை சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து புதிய வைரஸ் துரிதமாக பரவியுள்ளதாகவும் ஆய்வுகளை ஒருமித்து அவற்றின் செயற்றிறன் குறித்து ஆராய வேண்டும் என ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழு மற்றும் கொவிட் 19 பரிசோதனை பிரதம விசாரணையாளர் அன்றூவ் பொல்லர்ட் குறிப்பிட்டுள்ளார்.

அஸ்ரஸெனெக்காவுடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் திரிபடைந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.

இதேவேளை குறித்த தடுப்பு மருந்து தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட வைரஸை நோக்காகக்கொண்டும் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒக்ஸ்போர்ட் - அஸ்ரஸெனெக்கா தடுப்பு மருந்து நிறுவனம் முன்னிலையில் இருந்தது.ஆனால் பிரித்தானிய வைரஸ{க்கு எதிரான செயற்றிறனை பைஸர் மற்றும் மொடர்னா கொண்டுள்ளது அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து பின்தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read next: வெளிநாட்டு பயணத்துக்கு தனது எல்லைகளை மூடும் நோர்வே