கால்பந்து: சுவீடனை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்ற கனடா

Aug 06, 2021 10:43 pm

கனடா மகளிர் கால்பந்து அணி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒலிம்பிக்கில் 3-2 என்ற கணக்கில் சுவீடனை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.

கடந்த இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்ற பிறகு, அந்த அணி தங்க பதக்கத்தை வெல்வது இதுவே முதல் முறை.

ஜப்பானில் கனடிய அணியின் வெற்றி குறித்து கனடியர்கள், கால்பந்து வெறியர்கள் மற்றும் சக விளையாட்டு வீரர்கள் தங்கள் ட்விட்டரில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கனடாவின் தேசிய கால்பந்து அணிக்காக விளையாடும் அல்போன்சோ டேவிஸ், ட்விட்டரில் காணொளி செய்தி ஒன்றை வெளியிட்டு புதிய சாம்பியன்களுக்கான மகிழ்ச்சியை வெளியிட்டு உள்ளார்.

அமெரிக்க கால்பந்து ஜாம்பவான் அப்பி வம்பாக் கனடா அணியை தங்கப் பதக்கம் வென்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

டொராண்டோவைச் சேர்ந்த மற்றும் கனேடிய அணிக்காக மிட்ஃபீல்டு விளையாடும் குயின், தங்கம் ஒருபுறம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் பைனரி அல்லாத (ஆண்-பெண் என்று சரியாக அடையாளம் கூற முடியாத  ) விளையாட்டு வீரர் ஆவார்.

 

Read next: மின்சார ரெயில் சேவையில்மாற்றம் !