புட்டினை கைது செய்ய உத்தரவு - உக்ரைன் ஜனாதிபதி வரவேற்பு

Mar 18, 2023 06:26 pm

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளமை வரலாற்று சிறப்பு மிக்க முடிவு என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை கைது செய்ய சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் நேற்று இரவு செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைனில் இருந்து சட்டவிரோதமாக குழந்தைகளை நாடு கடத்தியது உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக புடினுக்கு எதிராக இத்தகைய வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்யா அங்கம் வகிக்காத காரணத்தினால் இந்த பிடியாணையை நிறைவேற்ற முடியாது என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாட்டிற்கு ரஷ்ய ஜனாதிபதி விஜயம் செய்யும் சந்தர்ப்பத்தில், இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதன் மூலம் அவரை கைது செய்யும் திறனையும் அதிகாரத்தையும் வழங்குகிறது.

அப்படி கைது செய்யப்பட்டால், அவரை நெதர்லாந்து தலைநகர் ஹேக்கில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் வாய்ப்பு உள்ளது.

எவ்வாறாயினும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மீதான குற்றச்சாட்டுகளை மறுப்பதாக ரஷ்ய அரசாங்கம் கூறுகிறது

Read next: அமெரிக்க கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை வீழ்த்திய விமானிகளுக்கு விருது வழங்கிய ரஷ்யா