ஒன்ராறியோவில் மேலும் புதிதாக 554 தொற்றுகளும், 4 இறப்புகளும் பதவியாகியது

3 weeks

ஒன்ராறியோ அரசாங்கம் இன்று மேலும் 554 புதிய தொற்றுகளையும், கொரோனா வைரஸ் தாக்கி மேலும் நால்வர் இறந்ததாகவும் அறிவித்துளளது.

சுகாதார அமைச்சர் கிறிஸ்டின் எலியட் தெரிவிக்கையில் 251 புதிய தொற்றுகள் டொரோண்டோவிலும், 106 தொற்றுகள் ஒட்டாவாவிலும், 79 தொற்றுகள் பீல் ரீஜெனிளும், 43 தொற்றுகள் யோர்க் ரீஜெனிளும் பதிவாகியதாக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் 62 விகிதத்துக்கும் மேலான தொற்றுகள் 40 வயதுக்கும் குறைத்தவர்கள் மத்தியில் ஏற்பட்டுளளதாக தெரிவித்தார்

ஆக மொத்தத்தில் 137 பேர் ஒன்ராரியோவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள், அவர்களில் 30 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள்.

ஒன்ராறியோவில் 64 புதிய தொற்றுகள் பாடசாலை சூழலிலும் பதிவாகியது, அவைகளில் 37 தொற்றுகள்  மாணவர்கள் இடையே ஏற்பட்டதாகும்.

இதன் காரணமாக  ஒன்ராறியோவில் உள்ள 4828 அரச நிதியில் இயக்கும் பள்ளிகளில் மொத்தம் 250 தொற்றுகள் இதுவரை பதிவாகி உள்ளது.

Read next: சர்வதேச பொருளாதாரத் தடைகளை மீறும் வடகொரியா