ஒரு நாளில் அதிக தொற்றுக்களை பதிவு செய்த ஒன்ராறியோ மாகாணம்

2 weeks

தற்பொழுது கிடைத்த தகவலின் படி கடந்த 24 மணி நேரத்தில் ஒன்ராறியோவில் 1588 தொற்றுகள் பதிவாகி உள்ளது, அதேவேளையில் 21 இறப்புகளும் பதிவாகி உள்ளது.

இன்றய அதிகூடிய ஒருநாள் தொற்றுகள் சென்ற வாரம் சனிக்கிழமை 1581 பதிவாகிய பின்னர் நிகழ்ந்துள்ளது.

இவ்வாறு தொற்றுகள் அதிகரித்து வருவதால் ஒன்ராறியோ முதல்வர் போர்ட் ரொடோண்டோ மற்றும் பீல் பிராந்தியத்தில் கடுமையன முடக்க விதிகளை அறிமுகப்படுத்தி உளளார். இது வரும் திங்கள் கிழமையில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

கனடாவை பொறுத்த வரை 31 ஜனவரி 2020 இல் இருந்து இதுவரை 320,719 தொற்றுகளும் 11,334 இறப்புகளையும் பதிவு செய்துள்ளது. இதுவரை 256,646 பேர் தொற்றிலிருந்து மீண்டுகளார்கள்.

கடந்த 14 நாட்களில் 65,358 தொற்றுள் ஏற்பட்டுள்ளது, 882 [பேர் பலியாகி உள்ளார்கள்.

Read next: ஒரு முறை கொரோனா தொற்றினால் குறைந்தது 6 மாதம் மீண்டும் தொற்று வராது-ஒக்ஸ்போர்ட் ஆராச்சியாளர்கள்