இலங்கையை தொடர்ந்து ஈரானிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள்-ஒருவர் பலி

ஈரானில் அதிகரித்து வரும் உணவு விலையின் காரணமாக இன்று சனிக்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகள் மூலம் தெரியவருகிறது. ஈரானின் தென்மேற்கு பகுதியில் ஒரு ஊடகவியலாளர் பலியானதாக ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
கடந்த வாரம் ஈரானிய அரசு கோதுமைக்கு வழங்கி வந்த மானியத்தை குறைத்ததில் இருந்தே இந்த ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பித்து இருந்தன. இவ்வாறு சலுகைகளை குறைத்ததின் காரணமாக கோதுமையின் விலை 300 விகிதமாக அதிகரித்தது. தற்போது அரசு அடிப்படை தேவையாக உள்ள சமையல் எண்ணெய் மற்றும் பால்மா தயாரிப்புகளின் விலையையும் அதிகரித்து உள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு இருந்த பெரும் தொகையானவர்களி பொலிஸார் கலைத்ததாக அரசு செய்து நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பெப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பை மேற்கொண்டபின்னர் கோதுமை மற்றும் எண்ணெய் போன்றவற்றின் விலை கணிசமாக அதிகரித்து வந்துள்ளது.
அத்தியாவசிய பொருள்களை ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கடத்தல் செய்யப்படுவதலும் விலை அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.