பழைய தொலைக்காட்சியினால் முழு கிராமமே இணைய சேவையை 18 மாதம் பெறமுடியாமல் போனது

2 months

Representative Image  

பழைய தொலைக்காட்சியை கண்டுபிடித்தன் மூலம் தினசரி காலை ஏழு மணிக்கு முழுக்கிராமமும் ப்ரோண்ட்பேண்டை தொடர்பை இழந்தமைக்கான மர்மம் தீர்க்கப்பட்டுள்ளது.

வேல்ஸின் பௌசியில் உள்ள அபர்ஹொசனில் உள்ள ஒருவருடைய பழைய முறைமையில் இருந்து வெளிவரும் சமிக்ஞை மூலம் முழுக்கிராமத்திற்கான ப்ரோட்ப்ரேண்டையே தடைசெய்துள்ளது.

18 மாதங்களின் பின்னர் பொறியியலாளர்கள் கேபில் மாற்று நடவடிக்கையில் ஈடுபட்ட போது அதனை சீர்செய்ய முற்பட்டதைத் தொடர்ந்தே குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இது ஒரு தொலைக்காட்சி பயன்பாட்டிலிருந்து நிகழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இதனை அடுத்து குறித்த பழைய முறைமையை பயன்படுத்திய நபர் அதனை இனி பயன்படுத்தபோவதில்லை என உறுதியளித்துள்ளார்.

குறித்த கிராமத்திற்கு தற்போது நிலையான ப்ரோட்ப்றேண்ட் சமிக்ஞை கிடைக்கின்றது.

ஓப்பன்ரீச் பொறியியலாளர்கள் குறித்த பிரச்சனையை கண்டறிவதற்காக கண்காணிப்பு சாதனம் ஒன்றை பொருத்தி ஏற்பட்டுள்ள சிக்கலை அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த தொலைக்காட்சி உரிமையாளர் தனது தொலைக்காட்சியை தினமும் காலை ஏழு மணிக்கு ஓன் செய்து அலைவரிசையை மாற்றுவார்.இதன்போது இலத்திரனியல் குறுக்கீடு ஏற்பட்டு ப்ரோட்பேண்ட் சமிக்ஞை பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த பழைய முறைமையிலான தொலைக்காட்சியிலிருந்து தனி உயர் மட்ட தூண்டல் விசை ஒன்று வெளியிடப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.இது ஏனைய இலத்திரனியல் உபகரணங்களில் மின் குறுக்கீட்டை உருவாக்குகிறது.

குறித்த விடயம் அடையாளம் காணப்பட்டதிலிருந்து இந்த பிரச்சனை மீண்டும் தோன்றவில்லை என பொறியியலாளர்  ஜோன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

மின்கூறுகளைக் கொண்ட எந்த ஒன்றும் அது வெளியில் உள்ள மின்விளக்குகள் முதல் மைக்ரோவேவ் வரையாக இருக்கலாம் அது ப்ரோட்பேண்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஓப்பன்ரீச் பிரதம பொறியியலாளர் சுஸன்னே ருதர்போர்ட் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் பிரித்தானியாவில் உள்ள பொதுமக்கள் பயன்படுத்தும் மின் சாதனங்கள் முறையான சான்றிதழ்களை பெற்றவையா என்பதையும் பிரித்தானியாவில் காணப்படும் தரத்திற்கு ஏற்புடையதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அவ்வாறு ஏதேனும் பிரச்சனை அடையாளம் காணப்பட்டால் சேவை வழங்குநருக்கு அறிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

Read next: Live: புதிய கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் தொடர்பான போரிஸ் ஜோன்சன் அவர்களின் உரை