போக்குவரத்து காவல்துறை சார்பாக ஸ்டிக்கர் ஓட்டும் வாகனங்களுக்கு நம்பர் பிளேட் பொருத்தி விழிப்புணர்வு

Jan 24, 2023 12:57 pm

சென்னை சென்ட்ரல் மெமோரியல் ஹால் அங்காடி சாலையில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் இ காபா உத்தரவின் பேரில் போக்குவரத்து கூடுதல்

ஆணையர் கபில் சரத்து கார் ஆலோசனையின் படி இணை ஆணையர் மயில்வாகனம் வழிகாட்டுதலின்படி போக்குவரத்து  வடக்கு மண்டல துணை ஆணையர் ஹர்ஷ சிங் தலைமையில் இருசக்கர வாகனங்களில்

ஸ்டிக்கர் ஒட்டி வரும் வாகன ஓட்டிகள் இடம் இருந்து 1500 வாகனங்களுக்கு ஆங்காங்கே உள்ள போக்குவரத்து ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மூலம் நம்பர் பிளேட் வழங்கப்பட்டு வருகிறது . .

இந்நிலையில் வடசென்னையில் குறிப்பாக டோல்கேட் எல்லையம்மன் கோவில் அஜக் பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர்

 நம்பர் பிளேட் இல்லாமல் ஓடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து வாகன ஓட்டிகள் வாகனங்களில் நம்பர் பிளேட் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

 இந்நிகழ்வில் உதவி ஆணையர் சம்பத் பாலன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சீனிவாசன், தர்மன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read next: பரீட்சைக்கு சென்ற மாணவியை வழிமறித்து ஆசிட் குடிக்கவைத்த இளைஞன்!