புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை – எம்.எ.சுமந்திரன்

Sep 13, 2021 01:02 pm

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அனுப்பிய கடிதத்தில் விடுதலைப் புலிகள் செய்த குற்றங்களை விசாரியுங்கள் என எங்கேயும் கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும் சுயாதீன விசாரணை பொறிமுறையை மேற்கொள்ள வேண்டும் என்பதையே சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் சகல அறிக்கையிலும் இரு தரப்பும் செய்த குற்றங்கள் என்பதையே சுட்டிக்காட்டியுள்ளது.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படும் சர்வதேச சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்கும்போது இரண்டு தரப்பு விசாரணைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் இதனை நிராகரிக்க முடியாது என்றும் எம்.எ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

Read next: திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் – செல்வம்!