சுமார் 28 வருடங்களாக தேடப்பட்டு வந்த இனப்படுகொலை குற்றவாளி மரணம்!

May 12, 2022 05:41 pm

ருவாண்டாவில் 1994 இனப்படுகொலையில் முக்கிய பங்கு வகித்தமைக்காக பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த   ருவாண்டாவின் முன்னாள் முக்கிய அதிகாரியின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Protais Mpiranya என்ற இவர், அப்போது ஜனாதிபதி காவலரின் தலைவராக இருந்தார். 

இவர் மீது ருவாண்டாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தால் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டார்.

புலனாய்வாளர்கள் இறுதியாக ஜிம்பாப்வேயின் தலைநகரான ஹராரேவின் புறநகரில் உள்ள அவரது கல்லறையைக் கண்டுபிடித்தனர்.

அதில் அவர் 2006 இல் இறந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இனப்படுகொலையின் தொடக்கத்தில், பிரதம மந்திரி அகத்தே உவிலிங்கியிமான உட்பட மூத்த மிதவாத ருவாண்டா தலைவர்களை கொலை செய்ய உத்தரவிட்டதாக தீர்ப்பாயத்தால் குற்றம் சாட்டப்பட்ட இவர் தப்பி ஓடியிருந்தார்.

10 பெல்ஜிய ஐ.நா அமைதி காக்கும் படையினரை கொலை செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Read next: இலங்கை முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கில் தளர்வு