பிரித்தானியாவில் 50 வயதுக்கு கீழ்ப்பட்டவர்கள் கோவிட் தடுப்பு மருந்தை பெற முடியுமா?

2 weeks

கொவிட் தடுப்பு மருந்தின் முதற்கட்டத்தை அதிக ஆபத்தை எதிர்கொண்டுள்ள வயோதிபர்களிடத்தில் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய இராஜ்ஜியத்தின் தடுப்பு மருந்து மற்றும் நோய்எதிர்ப்பு சக்தி குழு குறிப்பிட்டுள்ளது.

காப்பகங்களில் இருந்து இது ஆரம்பிக்கப்படும் என்பதுடன் கொவிட் 19 னினால் உயிரிழப்பவர்களை 99வீதம் இதன்மூலம் தடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்க உள்ளதையிட்டு பொரிஸ் ஜோன்ஸன் மகிழ்ச்சியடைவார்.

தீவிரமான பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவை பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஏற்றதா என்பது கண்டறியப்படும்.

இந்த நிலையில் தடுப்பு மருந்தை தானே பயன்படுத்துவதில் பிரதமர் மகிழ்ச்சியடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்வதற்கு தனது 78 வயதான தாயாரை தயாராக இருக்குமாறு தெரிவித்துள்ளதாக இங்கிலாந்தின் பிரதி சுகாதார மருத்துவ தலைமை அதிகாரி பேராசிரியர் ஜொனதன் வென் டெம் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைகள் தடுப்பு மருந்தை பயன்படுத்துவதற்கு தயாராக உள்ளது என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தடுப்பு மருந்து வழங்கும் இரண்டாம் கட்டத்தில் இளம்வயதினரிடையே தடுப்பு மருந்து எவ்வாறு செயற்படுகின்றது என்ற துல்லியமான தரவை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது.

பிஸர் மற்றும் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் தடுப்பு மருந்து 90 வீத வெற்றியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து தடுப்பு மருந்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த கவனம திரும்பி விட்டது.

முன்னுரிமை பட்டியல் :

·       காப்பகங்களில் வாழும் மற்றும் தொழில்புரிவோருக்கு

·       முறையே 80 75 70 65 60 வயதுகளுக்கு மேற்பட்டவர்களுக்கு

·       அடுத்தது இளையோருக்கு ஆனால் சிறுவர்களுக்கு அல்ல.சுகாதார நிலை அவர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்திவிடும்.

·       55 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

முன்னுரிமை பட்டியல் மாற்றங்களுக்கு உட்பட்டது.வயேதிபர்களுக்கு தடுப்பு மருந்து எவ்வாறு செயற்படுகின்றது என்பது குறித்து கூடிய அவதானம செலுத்தப்படும்.பெரும்பாலும் இவர்களிடத்தில் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியே ஏற்படும்.

அதிகளவான தடுப்பு மருந்துகள் கிடைக்கபெற்றால் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Read next: முதலீடுகள் மீது (காப்பிடல் ஜெயின்) விதிக்கும் வரியை இரட்டிப்பாக்க ரிஷி சுனக் ஆலோசனை