சைக்கிளில் சென்று பிள்ளையை பெற்றெடுத்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்

Nov 28, 2021 07:13 pm

நியூஸிலாந்து பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரசவ வலி ஏற்படவே மருத்துவமனைக்கு சைக்கிள் மூலம் சென்று ஒருமணி நேரத்துக்கு பின்னர் தனது குழந்தையை பெற்றுடுத்து உள்ளார்.

 நான் உண்மையாக சைக்கிளில் சென்று குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று திட்டமிடவில்லை ஆனால் அவ்வாறு நடைபெற்று விட்டது என்று ஜூலி ஆன் கென்டெர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.


 பசுமை கட்சியின் பேச்சாளரான இவர் இவ்வாறு செய்வது முதல் முறை அல்ல, மூன்று வருடங்கள் முன்னர் அவர் அமைச்சராக இருக்கும் பொழுதும் அப்பொழுதும் இவர் அவ்வாறு தான் செய்து இருந்தார்.

 41 வயதான இவர் சைக்கிள் ஓட்டுவதை கடுமையாக ஆதரிப்பவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.


 

Read next: பிரித்தானியாவுடன் இணைந்து செயல்பட தயார்-பிரான்ஸின் திடீர் மனமாற்றம்