ஹிஜாப்பை சீருடையின் ஒரு அங்கமாக அறிமுகப்படுத்திய நியூஸிலாந்து பொலிஸ்

1 week

Photo Credit: New Zealand Police/Facebook

பொலிஸ் பிரிவில் இஸ்லாமிய பெண்கள் இணைவதை ஊக்கப்படுத்தும் நோக்கில் நியூஸிலாந்து பொலிஸ் உத்தியோகபூர்வ சீருடையில் ஹிஜாப் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் உத்தியோகபூர்வ சீரடையாக ஹிஜாப்பை முதலில் அணியும் பெண் கான்ஸ்ரபிளாக இணைய போகின்றார் ஸீனா அலி.

நாட்டில் உள்ள மாறுப்பட்ட சமூகத்தையும் சேவையில் உள்ளடக்கும் வகையில் இந்த தீர்மானம் அமைவதாக ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் உள்ள மெட்ரோபொலிட்டன் மற்றும் ஸ்கொட்லாந்து பொலிஸிலும் ஹிஜாப்பை சீருடையாக பயன்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸில் ஹிஜாப்பை உத்தியோகபூர்வ சீருடையாக பயன்படுத்த 2006 ஆம் ஆண்டு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ஸ்கொட்hந்து பொலிஸிற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது.

Read next: ரொறொண்டோவில் முதல் முறையாக பாடசாலை ஊழியர் கொரோனா தாக்கி மரணம்