விமானங்களில் கொவிட் 19 தொற்று மிகக்குறைவு – IATA

4 months

 விமானத்தில் கொவிட் 19 தொற்று பரவல் குறைவாக உள்ளதை சர்வதேச வான் போக்குவரத்து கூட்டமைப்பு (IATA)வெளிப்படுத்தியுள்ளது.

2020 ஆரம்பத்திலிருந்து விமான பயணங்களுடாக ஏற்பட்ட தொற்றுக்களின் எண்ணிக்கை 44 என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த காலப்பகுதிக்குள் 1.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் விமானங்களில் பயணித்துள்ளனர்.

இது குறைத்து மதிப்பிடப்பட்டதாக காணப்படுவதாகவும் 90 வீதமானவை பதிவாகாமல் உள்ளதுடன் ஒவ்வொரு 2.1 மில்லியன் பயணிகளுக்கும் ஒருவர் தொற்றுக்குள்ளாவதாகவும் சர்வதேச வான் போக்குவரத்து கூட்டமைப்பின் மருத்துவ ஆலோசகர் வைத்தியர் டேவிட் பவல் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புள்ளிவிபரங்கள் உறுதிப்படுத்தப்பட்டவை என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இந்த எண்ணிக்கையில் குறைவு என்பதை அறியும் புதிய நுட்ப முறையை எயார்பஸ் பொயிங் மற்றும் எம்ராரர் ஆகியன முன்னெடுத்துள்ளன. 

Read next: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 73,000 புதிய வழக்குகள்