எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் பிரான்ஸில் புதிய திட்டம்

Mar 18, 2023 04:51 pm

எதிர்வருங்காலங்களில் பொருட்கள் வாங்கும் போது காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட கட்டணப்பட்டியல் வழங்கப்படமாட்டாது எனவும், நாடு முழுவதும் இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது எனவும் பிரான்ஸ் அறிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

காகிதங்களை வீணாக்குவதை தடுப்பதும், கழிவுகள் சேருவதை தடுப்பதுமே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

மக்கள் கொள்வனவு பொருட்களுக்கான கட்டணப்பட்டியல் டிஜிட்டல் முறையில் தொலைபேசிகளுக்கோ அல்லது மின்னஞ்சலுக்கோ அனுப்பிவைக்கப்படும்.


Read next: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட் ரத்து