அமெரிக்காவில் வரும் மாதங்களில் தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 3000 ஆக அதிகரிக்கலாம்!

3 weeks

இலையுதிர்காலத்திலும் குளிர்காலத்திலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவக்கூடும் என்று சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கும் வேளையில் அமெரிக்காவில் கிட்டத்தட்ட பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்களில்  கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கின்றன.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகளின் சிஎன்என் பகுப்பாய்வின்படி, ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, 21 மாநிலங்களில் முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது புதிய கோவிட் -19 தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்தது 10 சதவீதம் அல்லது அதற்கு மேலாக அதிகரித்துள்ளது.

அலபாமா, அலாஸ்கா, நெவாடா, நியூ ஜெர்சி, ஓரிகான், தென் கரோலினா மற்றும் வயோமிங் போன்ற 21 மாநிலங்களில் தொற்றுகள் அதிகரித்து வருகின்றன.

பதினெட்டு மாநிலங்கள் சீராக இருக்கின்றது. அரிசோனா, லூசியானா, டென்னசி மற்றும் நியூ ஹாம்ப்ஷயர் உள்ளிட்ட 11 மாநிலங்களில் மட்டுமே முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது 10 சதவீதத்திற்கும் அதிகமான புதிய தொற்றுகள்  குறைந்துள்ளன.

வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் (IHME) இன் சமீபத்திய கணிப்புகள் படி அமெரிக்காவில் ஒரு பெரிய குளிர்கால மிகக்கூடிய தொற்றுகள் ஏற்படலாம் என்று கணித்துள்ளது. இவ்வாறு தொற்றுகள் ஏற்படும் வேளையில் இது ஆண்டு இறுதிக்குள் ஒரு நாளைக்கு 3,000 பேர் கொரோனா வைரஸ் தாக்கி பலியாகலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் பிற்பகுதியில் தினசரி இறப்புகள் ஒரு நாளைக்கு 3,000 ஐ எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 1 ஆம் தேதிக்குள் ஒட்டுமொத்த இறப்புகள் 371,000 ஐ எட்டும் என்று குறிப்பு காட்சி தெரிவிக்கிறது.

அக்டோபர் மாதத்தில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து இந்த தொற்றுகள் காரணமாக கொரோனா வைரஸ்நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அது மிக வேகமாக பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் எதிர்பார்க்கப்படும் தினசரி இறப்புகளின் பெரிய அதிகரிப்பு தொடர்ந்து மனித செய்லபாடுகள் அதிகரிப்பதாலும் மற்றும் முகமூடி பயன்பாட்டின் வீழ்ச்சியால் உந்தப்படும் என்று அந்த அறிக்க்கை தெரிவிக்கின்றது.  

இலையுதிர்காலம் மற்றும் குளிர்காலத்தில் COVID-19  தொற்றுகள் பரவுவதை  நாடு காணக்கூடும், ஏனெனில் மக்கள் குறைந்த எச்சரிக்கையுடன் செயல்படுவதோடு, வீட்டிற்குள் அதிக நேரம் செலவிடுவார்கள், அங்கு பரவுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்று IHME இயக்குனர் கிறிஸ் முர்ரே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் இயக்குனர் ராபர்ட் ரெட்ஃபீல்ட்  வரும் இலையுதிர் காலம் மற்றும் குளிர்காலம் ஆகியவை அமெரிக்க மக்கள் பொது சுகாதாரத்தில் அனுபவித்த மிகவும் கடினமான காலங்களில் ஒன்றாக இருக்கலாம் என்று எச்சரித்தார்.

அமெரிக்கா முழுவதும் தினசரி தொற்றுகள் சராசரியாக 40,000 ஆக இருப்பதால், புதிய பருவம் ஒரு சவாலாக இருக்கும் என்று அமெரிக்க தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநரும் வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் பணிக்குழுவின் முக்கிய உறுப்பினருமான அந்தோனி பாவ்சி கூறினார்.

கோவிட்19 க்கு முன்னர் வாழ்க்கை முறை இருந்தது போல் மீண்டும் வருவதற்கு 2021 ஆம் ஆண்டின் முடிவு வரை காத்திருக்க வேண்டும் என்று பாவ்சி தெரிவிதித்தார்.

அதுவரை, பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கவனித்து முகமூடிகளை அணிந்துகொள்வது, சமூக தூரத்தை வைத்திருப்பது, நெரிசலான இடங்கள் மற்றும் கூட்டங்களைத் தவிர்க்குமாறு பாவ்சி மற்றும் பிற முன்னணி வல்லுநர்கள் அமெரிக்க மக்களை வலியுறுத்தியுள்ளனர்.

அயோவா பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் மற்றும் நோயெதிர்ப்புத் துறை பேராசிரியர் ஸ்டான்லி பெர்ல்மன், பொருத்தமான நடவடிக்கைகள் மற்றும் ஒரு தடுப்பூசி மூலம், இந்த கொரோனா பரவும் வேகம்  நாம் அஞ்சுவதை விட குறைவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரமனாக அமெரிக்காவில் 7.13 மில்லியனுக்கும் அதிகமான உறுதிப்படுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றுகள்  மற்றும் திங்கள்கிழமை பிற்பகல் நிலவரப்படி 204,900 க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வைத்திருக்கும் நிகழ்நேர தகவல் பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read next: ஒன்ராறியோவில் மேலும் புதிதாக 554 தொற்றுகளும், 4 இறப்புகளும் பதவியாகியது