தேசிய அளவிலான கராத்தே போட்டி

Dec 28, 2022 06:13 am

அண்மையில் குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கோவையைச் சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் 20 பேர் வெற்றி பெற்று அசத்தி உள்ளனர்.கோவை இரயில்நிலையம் வந்த  அவர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது..

கடந்த 23 ந்தேதி முதல் 25ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் 12 வது தேசிய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

தேசிய அளவில் நடைபெற்ற இதில் ஆந்திரா,தமிழ்நாடு, மகாராஷ்டிரா,இராஜஸ்தான்,உ.பி.என நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

கோவையிலிருந்து மை கராத்தே சர்வதேச பள்ளியை சேர்ந்த இருபது மாணவ,மணவிகள் கலந்து கொண்டனர்.

கட்டா,குமித்தே என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்ற அனைத்து மாணவ,மாணவிகளும் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று பதக்கம் வென்றனர்.

இந்நிலையில் குஜராத்தில் இருந்து  கோவை திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு இரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இதில் பயிற்சியாளர்கள்,பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்…

Read next: காவலர்களுக்கான வருடாந்திர படைதிரட்டு கவாத்து பயிற்சி.