சர்வதேச போட்டிகளை இலங்கையில் நடத்துவது குறித்து அமைச்சர் நாமல் யோசனை

2 months

சர்வதேச  விளையாட்டுப் போட்டிகளை  இலங்கையில் நடத்த முடியுமா என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன் என தெரிவித்த அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தால், எமது நாட்டு விளையாட்டுத் துறை வீரர்கள்  விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுப்படுவதை தவிர்த்துள்ளனர் எனத் தெரிவித்த அவர்,  நவீன தொழில்நுட்ப  வசதிகளை உள்ளடக்கிய உடற்பயிற்சிகளை  விளையாட்டு வீரர்கள்  இலங்கை  மன்றக் கல்லூரியில் பெற்றுக் கொள்வதற்கான  வாய்ப்பு  தற்போது  ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Read next: நம்பிக்கை வைத்தால் தலைமையை ஏற்கத் தயார்-ருவன் விஜேவர்தன