ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் - ரசிகர்கள் மகிழ்ச்சி

Mar 13, 2023 03:24 am

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது.

சினிமா உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது விருது வழங்கும் விழா அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கி நடைபெறுகிறது. 95வது ஆஸ்கார் விருது விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டால்பி அரங்கில் நடைபெறுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு, சிறந்த பாடலுக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த நாட்டு நாட்டு பாடல் கோல்டன் க்ளோப் விருது வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக ஏஆர் ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருது வாங்கியிருந்தார், இதனையடுத்து தற்போது ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்காக நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது, இந்த விருதினை இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Read next: பிரான்ஸில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நபர் - தேவாலயங்கள் சேதம்