9 நிமிடங்களில் ஜேர்மன் அருங்காட்சியகத்திலிருந்து தங்க நாணயங்களை திருடிச் சென்ற கில்லாடி திருடர்கள்...

Nov 24, 2022 11:16 am

வெறும் ஒன்பது நிமிடங்களில் பெருமதிப்பிலான தங்க நாணயங்களை ஜேர்மன் அங்காட்சியகம் ஒன்றிலிருந்து திருடிச்சென்றுள்ளார்கள் திருடர்கள் சிலர்.

ஜேர்மனியின் பவேரியாவிலுள்ள அருங்காட்சியகம் ஒன்றிலிருந்து நூற்றுக்கணக்கான அரிய, பழங்கால நாணயங்கள் திருடப்பட்டுள்ளன.

காலையில் வழக்கம்போல் பணிக்கு வந்த அருங்காட்சியக ஊழியர்கள், தரையில் கண்ணாடித்துண்டுகள் சிதறிக்கிடப்பதைக் கண்டபோதுதான், கண்ணாடிப்பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டிருந்த அந்த பழங்கால தங்க நாணயங்களை யாரோ திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

ஒன்பதே

திருடர்கள், மின்சார வயர்கள் மற்றும் இண்டர்நெட் கேபிள்களை முன்கூட்டியே துண்டித்ததால் அலாரம் செயலிழந்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொண்டு ஒன்பதே நிமிடங்களில் தங்க நாணயங்களைத் திருடிச் சென்றுள்ளார்கள் திருடர்கள்.

அந்த தங்க நாணயங்களின் மதிப்பு சுமார் 1.6 மில்லியன் யூரோக்கள் ஆகும்.

பிரச்சினை வெறும் திருட்டு அல்ல. அவற்றின் மதிப்பு தெரியாத திருடர்கள், அந்த அரியவகை பழங்கால நாணயங்களை உருக்கி விற்றுவிடக்கூடும் என்பதும்தான்.  

Read next: இலவச வீட்டுமனை பட்டா வேண்டி காத்திருப்புப் போராட்டம்