பறிக்கப்பட்ட கிரீடம் மீண்டும் அவரிடமே சென்றது! இலங்கை அழகி போட்டியில் அடுத்தடுத்து நடந்த பரபரப்பு சம்பவங்கள்..

1 week

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இலங்கைக்கான திருமதி அழகிப் போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு பின்னர் அவர் விவாகரத்தானவர் என்ற காரணத்தை முன்வைத்து அவருடைய மகுடம் நீக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதில் புஷ்பிகா டி சில்வா முதலில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். பின்னர் அவரிடமிருந்த மகுடத்தை திருமதி உலக அழகியான கரோலின் ஜூரி பலவந்தமாக அகற்றினார்.

இதன்போது தனக்கு காயம் ஏற்பட்டதாக கூறி புஷ்பிகா டி சில்வா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 

இது தொடர்பில் நேற்று கரோலின் ஜூரி உட்பட பலர் விசாரணைக்காக அழைக்கப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் திருமதி உலக அழகியின செயற்பாட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கண்டித்திருந்ததுடன், பறிக்கப்பட்ட திருமதி இலங்கை அழகி பட்டத்தையும் மகுடத்தையும் புஷ்பிகா டி சில்வாவுக்கு மீண்டும் வழங்கி வைத்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த புஷ்பிகா டி சில்வா, இவற்றுக்கு தாம் பின்நிற்கப்போவதில்லை என்றும், எதிர்காலத்தில் தாம் அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும் இலங்கையில் இன்று என்னைப் போன்ற ஏராளமான தனியாக வாழும் அம்மாக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று திருமதி டி சில்வா செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். 

இந்த கிரீடம் அந்த பெண்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றார்.


Read next: புத்தாண்டுக்குப் பின்னர் பல்கலைக்கழகங்களைத் திறக்க தீர்மானம் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு.