காலை தரிசனம் ! ஸ்ரீ கல்கருடன் தரிசனம்

Nov 23, 2022 05:21 am

 வேதாந்த தேசிகன் கருடனைக் குறித்துத் தாம் இயற்றிய ஐம்பது ஸ்லோகங்களின் தொகுப்பான கருட பஞ்சாசத்தின் 31-வது ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார்:

“ப்ரத்யக்ராகீர்ண தத்தத் பணிமணி நிகரே சங்குலாகோடி வக்ரம்

துண்டாக்ரம் ஸங்க்ஷுவான: குலகிரி கடினே கர்ப்பரே கூர்மபர்த்து: |

பாதாள க்ஷேத்ர பக்வத்விரஸன ப்ருதனா சாலி விச்சேத சாலி

சைலீம் நஸ்ஸப்த சைலீ லகிமதரஸப: ஸௌது ஸாத்வீம் ஸுபர்ண: ||”

இந்தப் பாடலுக்கு உண்டான விளக்கம் கீழே உள்ள கதையில் கூறப்பட்டுள்ளது

இன்று அமாவாசை புதன்கிழமை

சுபகிருது வருடம் : 

கார்த்திகை மாதம்

07ஆம் தேதி !

நவம்பர் மாதம் :

23ஆம்  தேதி !!

(23-11-2022)

சூரிய உதயம் :

காலை : 06-15 மணி அளவில் !

இன்றைய திதி : 

இன்று காலை 06.34 வரை சதுர்த்தசி !

பின்பு அமாவாசை !!

இன்றைய நட்சத்திரம் :

இன்று இரவு 10.30 வரை விசாகம் ! பின்பு அனுஷம் !!

யோகம் : 

இன்று காலை 06.14 வரை யோகம் நன்றாக இல்லை ! பின்பு சித்தயோகம் !!

இன்று : 

கீழ் நோக்கு நாள் !

நல்ல நேரம் :

காலை : 09-15 மணி முதல் 10-15 மணி வரை !

மாலை : 04-45 மணி முதல் 05-45 மணி வரை !!

சந்திராஷ்டமம் : 

அஸ்வினி ! பரணி !!

ராகுகாலம் :

பிற்பகல்  : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !

எமகண்டம் :

காலை : 07-30  மணி முதல் 09-00 மணி வரை !!

குளிகை :

காலை : 10-30 மணி முதல் 12-00 மணி வரை !!

சூலம் :   வடக்கு !  

பரிகாரம்: பால் !!

ஹோரை புதன்கிழமை 

காலை

6-7.புதன்.      சுபம்  

 7-8.சந்திரன்.சுபம்   

 8-9. சனி..  அசுபம் 

 9-10.குரு.சுபம் 

 10-11. செவ்வா.அசுபம் 

 11-12. சூரியன்.அசுபம் 

பிற்பகல் 

 12-1. சுக்கிரன்.சுபம் 

 1-2. புதன்.     சுபம்  

 2-3. சந்திரன்.சுபம்  

மாலை 

 3-4. சனி..   அசுபம் 

 4-5. குரு.  சுபம்   

 5-6. செவ்வா.அசுபம் 

 6-7. சூரியன்.அசுபம் 

நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.

கருடனுக்கு ருத்ரா, சுகீர்த்தி என இரண்டு மனைவிகள். அவர்களுள் ருத்ரா ஒருநாள் கருடனிடம், “உங்கள் அலகு இவ்வளவு கூர்மையாக உள்ளதே! இந்தக் கூரிய அலகு இருப்பதால், உங்கள் அருகில் வருவதற்கே பயமாக இருக்கிறது!” என்று சொன்னாள்.

“சுவாமி... உங்கள் அலகு இவ்வளவு கூர்மையாக இருப்பதற்கு என்ன காரணம்?” என்று கருடனிடம் கேட்டாள் சுகீர்த்தி.

எந்த ஒரு பொருளும் நன்றாகச் சாணை பிடித்தால் தான் கூர்மையாக இருக்கும்.

ஒரு விவசாயி எப்படி அறுவடைக்குச் செல்லும் முன் தனது அரிவாளைப் பாறை யில் தேய்த்துச் சாணை பிடிப்பாரோ,

அது போல் நான் எனது அலகை ஒரு சரியான உரைகல்லில் தேய்த்துச் சாணை பிடிக்கிறேன்!” என்றார் கருடன்.

“அது என்ன உரைகல்?” என்று கேட்டாள் ருத்ரா.

“அன்று மந்தர மலையைத் தன் முதுகில் சுமப்பதற்காகத் திருமால் கூர்மாவதாரம் எடுத்தார். பாற்கடலைக் கடைந்து முடித்த பின், மந்தர மலையைத் தம் முதுகில் இருந்து இறக்கி வைத்த கூர்ம மூர்த்தி,

அதன்பின் பூமியைத் தமது முதுகில் சுமக்கத் தொடங்கினார். இன்றும் பாதாள லோகத்தில் பூமியைத் தாங்கிய வண்ணம்

கூர்ம மூர்த்தி எழுந்தருளியுள்ளார். நான் அவ்வப்போது பாதாளத்துக்குச் சென்று அவரைச் சந்தித்து அவருடன் உரையாடிக் கொண்டிருப்பேன். அவ்வாறு உரையாடும் போது, ஆமை வடிவிலுள்ள அவருடைய ஓட்டில் என் அலகைத் தேய்த்துச் சாணை பிடிப்பேன்! அதனால் தான் எனது அலகு மகாபாரதத்தில் துரோணர் பயன்படுத்திய

கத்தி போல் கூர்மையாக உள்ளது!” என்றார் கருடன்.

“நீங்கள் இப்படி அவர் முதுகில் உங்கள் அலகைத் தேய்த்தால் அவருக்கு வலிக்கா தா?” என்று கேட்டாள் ருத்ரா.

“இல்லை! நான் என் அலகைக் கூர்மையா க்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் முதுகில் அதைத் தேய்க்கவில்லை. அவர் முதுகை இதமாக வருடி விடுவதற்காகத் தான் என் மூக்கை அவரது முதுகில் தேய்ப் பேன். ஆனால் திருமாலுக்குச் செய்யும் கைங்கர்யத்தின் ஏற்றம் யாதெனில், நாம் அவரிடம் எதையுமே பிரார்த்திக்காமல்

அவருக்குத் தொண்டு செய்து கொண்டே இருந்தால், நமக்கு எது தேவை என்பதைத் திருமாலை ஆராய்ந்து, அவை அனைத் தையும் நமக்கு அவரே அருளி விடுவார்.

எனவே நான் கேட்காமலேயே எனது அலகினை அவரது ஓடு கூர்மையாக்கி விடுகிறது!” என்றார் கருடன்.

“ஆதிசேஷன் தானே பாதாளத்திலிருந்த படி உலகைபிதாங்குகிறார். கூர்ம மூர்த்தி தாங்குகிறார் என்று சொல்கிறீர்களே!” என்று கேட்டாள் சுகீர்த்தி.

“ஆதிசேஷன் பூமியைப் பாதாளத்தில் இரு ந்து தாங்குவது உண்மை தான். ஆனால் அந்த ஆதிசேஷனுக்குக் கீழே இருந்து கொண்டு, ஆதிசேஷனோடு சேர்த்து உலகையும் தாங்குபவர் கூர்ம மூர்த்தி தான். அதனால் தான் இன்றும் கோயில்க ளில் சேஷ வாகனத்தின் கீழே ஆமை வடி வில் கூர்ம மூர்த்தி இருப்பதைக் காணலாம்!” என்றார் கருடன்.

“அந்தக் கூர்ம மூர்த்தியை நாங்களும் தரிசிக்க விரும்புகிறோம்!” என்றார்கள் ருத்ராவும் சுகீர்த்தியும்.

வாருங்கள்!” என்று அவர்களையும் பாதா ளத்துக்கு அழைத்துச் சென்றார் கருடன்.

‘மஹீ என்றால் பூமி என்று பொருள். பூமி யைத் தாங்கும் கூர்ம மூர்த்தி ‘மஹீபர்த்தா என்றழைக்கப்படுகிறார்.

அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 184-வது திருநாமம். “மஹீபர்த்ரே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அடியார்களின் அறிவாற்றல், கருடனின் அலகைப் போல்

கூர்மையாகும் படித் திருமால் அருள்புரிவார்.

ஓம் நமோ நாராயணாய....

சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்... 

ஸ்ரீ கருடன் அருளாளே இன்றைய நாளும் திரு நாளாகட்டும்..!

சௌஜன்யம்..!

அன்யோன்யம் .. !! 

ஆத்மார்த்தம்..!

தெய்வீகம்..!.. பேரின்பம் ...!!

அடியேன்

ஆதித்யா

Read next: திருத்தணி கலெக்டர் அரசுப் பள்ளியில் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை திறந்துவைத்தார்.