காலை தரிசனம் ; ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்.

Sep 20, 2022 04:45 am

காலை தரிசனம் ; ஸ்ரீராமர் பட்டாபிஷேக தரிசனம்..

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச விரைசெறி குழலி ஓங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுேளார் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மௌலி...!!

ஸ்ரீராமர் பட்டாபிஷேகம்

செவ்வாய்க்கிழமை !

சுப கிருது வருடம் :புரட்டாசி மாதம் 03 ஆம்  நாள் !

செப்டம்பர் மாதம் : 20 ஆம் தேதி ! (20-09-2022)

சூரிய உதயம் : காலை : 06-12 மணி அளவில் !

சூரிய அஸ்தமனம் : மாலை : 06-13 மணி அளவில் !

இன்றைய திதி : தேய்பிறை :

தசமி !

தசமி...

இரவு 10-15 மணி வரை அதன் பிறகு ஏகாதசி !

இன்றைய நட்சத்திரம் : 

புனர்பூசம் !

புனர்பூசம்..

இரவு 10-45 மணி வரை ! அதன் பிறகு  பூசம் !!

இன்று

சம நோக்கு நாள் !

யோகம் :   சித்தயோகம் ! 

சந்திராஷ்டமம் :இன்று மாலை 06-15 மணி வரை விருச்சிக ராசிக்கு சந்திராஷ்டமம் ! 

அதன்பிறகு தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பம் !!

ராகுகாலம் : மாலை  03-00 மணி முதல் 04-30 மணி வரை !!

எமகண்டம் : காலை 09-00 மணி முதல் 10-30 மணி வரை !!

குளிகை :  மதியம் : 12-00 மணி முதல் 01-30 மணி வரை !!

சூலம் :  வடக்கு !

பரிகாரம் : பால் !!

கரணம் : காலை 07-30 மணி முதல் 09-00 மணி வரை !

நல்ல நேரம் : காலை 08-00 மணி முதல் 09-00 மணி வரை !

மதியம் : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !

இரவு :07-00 மணி முதல் 08-00 மணி வரை !

இன்றைய சுப ஓரைகள் ;

சுக்ர ஓரை ;காலை : 08-00 மணி முதல் 09-00 மணி வரை !!

குரு ஓரை : மதியம் : 12-00 மணி முதல் 01-00 மணி வரை !!

இன்றைய சிறப்புகள் :இன்று

புனர்வசு நட்சத்திரம் ! (புனர்பூசம்)

புனர்வசு என்றால் இழந்த பொருள்களை மீண்டும் பெறுதல் என்று பொருள்..!

புனர்வசு ஸ்ரீராமரின் திருநட்சத்திரம் !

ஸ்ரீராம்பிரான் தன் உடமைகள் அனைத்தும் இழந்தார்...

மனைவியை பிரிந்தார்..அனைத்தும் மீண்டும் திரும்ப கிடைக்கப் பெற்றார்..!

இன்று  ஸ்ரீராமரை பட்டாபிஷேக கோலத்திலே வணங்க வேண்டிய நாள் !

ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலத்தில் உள்ள படத்தை வீட்டில் வைத்து வணங்க வேண்டிய நாள் !

ஸ்ரீராமர் பிறந்தபோது புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தன .. 

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

 திண்மையும், பாபமும் சிதைந்து தேயுமே

 வெண்மழும், மரணமும் இன்றித் தீருமே..

 இம்மையே இராமா என்றிரண்டெ ழுத்தினால் மும்மைசால் உலகுக்கெல்லாம் மூலமந்திரத்தை முற்றும்..

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தாமே..

 இம்மையே எருமை நோய்க்கும் மருந்துமாம் இராமன் என்றும்..

செம்மைசேர் நாமம் தன்னைக் கண்ணில் தெரியக் கண்டான் . 

        - கம்பராமாயணம்.

ஸ்ரீராம நாமமானது அஷ்டாட்சரமான ஓம் நமோ நாராயணாய என்பதில் உள்ள ரா என்ற எழுத்தையும், 

பஞ்சாட்சரமான நமச்சிவாய என்ற எழுத்தில் ம என்ற எழுத்தையும் சேர்த்து ராம என்றானது...!

நவமி திதியில் உதித்த சக்ரவர்த்தி திருமகன்..

ஸ்ரீ ராமபிரான் புணர்பூச நட்சத்திரத்தில் கடக ராசி மற்றும் லக்னத்தில் ஜெட ஜென்ம ராசியில் பிறந்தவர்..!

லக்னத்தில் குரு உச்சம் பெற்று ஸ்ரீ ராமர் தெய்வீகத்தன்மையோடும் சாஸ்திரம் பிறழாமலும் வாழ காரணமாகி நின்றார்..! 

புனர்பூச வழிபாடு...நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிட்டும். குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

லட்சுமி கடாட்சம் கிடைக்கும். பகைவர்கள் நண்பர்களாக மாறி வருவார்கள். வியாதிகள் நீங்கும். 

தொலைந்துப்போன பொருட்கள் கிடைக்கும். 

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். குடும்பநலம் பெருகி வறுமையும், பிணியும் அகலும். நாடிய பொருட்கள் கைகூடும்...!

ஸ்ரீராமர் அருளாளே ... இன்றைய நாளும் திருநாளாகட்டும்..

 சௌஜன்யம்..!

அன்யோன்யம் .. !! 

ஆத்மார்த்தம்..!

தேசியம்..!

தெய்வீகம்..! பேரின்பம் ...!!

Read next: அமெரிக்காவில் கொரோனா முடிவுக்கு வந்தது!!! ஜோ பைடன் அறிவிப்பு