ட்ரம்பின் தேர்தல் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் பகிரங்கமாகச் சந்தேகம் வெளியிட்ட பல குடியரசுக்கட்சியினர்

2 weeks

தேர்தலில் மோசடி இடம்பெற்றுள்ளதாக ட்ரம்ப் தெரிவிக்கின்றமை தொடர்பில் குடியரசுக்கட்சிகாரர்கள் பலர் தமது சந்தேகங்களை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் புதிய ஜனாதிபதிக்கு அதிகாரத்தை வழங்கும் வகையிலான அதிகார மாற்றத்திற்கு ட்ர்ம்பிற்கு பிரயோகிக்கப்படும் அழுத்தங்களும் அதிகரித்து வருகின்றது.

அடுத்த ஜனாதிபதியாவதற்கு பைடனுக்கு சிறந்த சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அதிகார மாற்றத்திற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு ட்ரம்ப் நிர்வாகத்தை கோருவதாகவும் இவ்வருட இறுதியில் ஓய்வு பெற உள்ள செனற்றர் லமர் அலெக்ஸாண்டர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் நாட்டை முன்னிலைப்படுத்தி வெற்றிபெற்றவருக்கு புதிய ஆரம்பத்திற்காக வாழ்த்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாக்கெண்ணுவதில் எந்த ஒரு மோசடியும் இடம்பெற்றுள்ளதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ட்ரம்பிற்கு அதிக ஆதரவு உள்ள மாநிலத்தில் பைடன் வெற்றிபெற்றுள்ளார் என்றும் மிச்சிகன் பிரதிநிதி ப்ரெட் அப்டன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நான்கு வருடங்களாக ட்ரம்பை ஆதரித்தவர்கள் கூட தற்போது அவர குறித்து விமர்சிக்க ஆரம்ப்pத்துவிட்டனர்.

 

Read next: ஐக்கிய இராஜ்ஜியத்தில் கொவிட் உயிரிழப்புகள் 70000 என்ற மைல்கல்லை எட்டியுள்ளது-டெய்லி மெயில் .